நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது. ஆனால்…

நாளையை உருவாக்க முடியும்!

ஆர்ப்பரிக்கும் இந்தியப் பெருங்கடலின் அலைகள் கரையைத் தழுவும் போதெல்லாம் முணுமுணுக்கும் வார்த்தைகள் ஒன்றுதான். வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதில்தான் இலங்கையர்களின் வெற்றியுள்ளது எனும் மகத்தான செய்திதான் அது! 

வெவ்வேறு மதங்களையும், வெவ்வேறு இனஙகளையும், வெவ்வேறு கலாச்சாரப் பின்புலங்களையும் இணைக்கும் இலங்கை மனித வாழ்வின் ஒரு மகத்தான அனுபவம் என்றால் அது மிகையாகுது.

இயற்கைத் தாயின் தூய்மையான அழகிய அரவணைப்பு நம்மைச் சூழ்ந்திருந்த போதும்,  எமது பாரம்பரியம் என்பது நம் அனைவராலும் பொதுவாக பகிரப்பட்ட ஒன்றாக இருந்த போதும், பிரிவின் பிளவுகள் நம் கூட்டுப் பயணத்தைச் சிதைத்து விட்டன என்பது ஒரு சோகம் சூழ்ந்த நிதர்சனமான உண்மை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

வரலாறு நெடுக பிரிவினையின் வடுக்கள் நம் தாய் மண்ணில் தங்கள் தடங்களைப் பதித்தே வந்துள்ளன. மதக்கலவரங்கள் மற்றும் அரசியல் முரண்பாடுகளால் தூண்டப்பட்ட கடந்த கால மோதல்களின் எதிரொலிகள் இன்னும் நம் மக்களின் நினைவுகளில் நீடிக்கின்றன. இந்த கொந்தளிப்பான காலங்கள் ஏற்படுத்திய காயங்கள் பிரிவின் அபாயங்களை இன்றும் அப்பட்டமாக நினைவூட்டுகின்றன. ஆயினும், நமது கடந்த காலத்தின் கரிய நிழல்களுக்கு மத்தியில், நம் நம்பிக்கையின் தீபம் மினுமினுக்கிறது – இந்த ஒற்றுமை எனும் கலங்கரை விளக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதையை ஒளிரச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

வளமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு, கடந்த காலத்தில் எம்மைப் பாதித்த சாதி, மதம், இனம் போன்ற  தடைகளை நாம் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் அவர்களின் வேறுபாடுகளுக்காக அல்லாமல் , மாறாக அவர்கள் நமது நாட்டின் செழுமைக்கும்  முன்னேற்றத்துக்கும் தரும் பங்களிப்புக்காக மதிக்கப்படும் ஒரு மாற்றத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். ஒவ்வொரு சமூகத்தையும் உள்வாங்கிக்கொண்டு, பரஸ்பர மரியாதை செலுத்துவதன் மூலம் மற்றுமே நமது தேசத்தின் முழு திறனையும் நாம் பயன்படுத்தி, ஒரு செழிப்பான பாதைக்கு அடிக்கல் நடலாம்.

நம் நாட்டின் மரகத நிலப்பரப்புகளையும், பழங்காலச் சின்னங்களையும் நாம் உற்றுப் பார்க்கும்போது, நமது நரம்புகளில் ஊடுருவிச் செல்லும் நெகிழ்ச்சி சொல்லும் செய்தி  ஒன்றுதான் –  அது, வரலாற்றின் புயலை எதிர்கொண்டு, அதற்காக வலுவாக வெளிப்பட்ட ஒரு மக்களின் எழுச்சியை எண்ணிப் பார் என்பதுதான். நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அதிசயங்களிலிருந்து உத்வேகம் பெறுவோம், ஒற்றுமை என்பது ஒரு உயர்ந்த இலட்சியமாக இல்லாமல், வாழும் யதார்த்தமாக இருக்கும் பட்டுச்சீலையில், ஒவ்வொரு இழையும் ஒரு தனித்துவமான சாயலுடன், ஒரு தனித்துவமான கதை சொல்லப்பட காத்திருக்கிறது. நாம் ஒன்றுபடுவோம். வேறுபட்ட இழைகளாக அல்லாமல், மனித நேயத்தைப் போற்றும் அதே வேளையில் நமது வேறுபாடுகளைக் கொண்டாடும் ஒரு தேசத்தின் இதயத்துடிப்பாக இயங்க உறுதி கொள்வோம்.

ஒற்றுமையே எம் பலம். அதன் மூலம் மட்டுமே நமது தேசத்தின் முழுத் திறனையும் வெளிக்கொணர்ந்து, இலங்கையின் வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியும்.

நாம் எழுதப்போகும் அந்த அத்தியாயம் பிரிவினையால் வரையறுக்கப்பட்ட அத்தியாயமாக அல்லாமல், ஒற்றுமைத் தீபத்தின் வெளிச்சத்தில் ஒரு பிரகாசமான விடியலுக்காக நாம் எடுக்கும்  உறுதிமொழியால் வரையறுக்கப்பட்ட ஒரு அத்தியாயமாக ஒளிர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *